சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்ட கிளப் மோதலில்  கத்திக்குத்து; உரிமையாளர்கள் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement

கொடைரோடு : கொடைரோடு, அம்மையநாயக்கனுார் பகுதியில் அனுமதியற்ற சூதாட்ட கிளப்கள் பல செயல்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் எஸ்.பி., தனிப்படையினர் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இருப்பினும் ஊரடங்கு நேரத்திலும் அனுமதியற்ற கிளப்கள் தாராளமாக செயல்படுகின்றன.

இவ்வாறு கொடைரோடு டோல்கேட் அருகே நடந்துவரும் கிளப்பில், நேற்று பணத்தகராறு காரணமாக இருதரப்பினரிடையே மோதல் உருவானது. இதில் கிளப் நடத்திய கொடைரோடு ராம்குமார் 28, அருண்குமார் 29, ஆகியோர் இதே பகுதியை சேர்ந்த செண்பகராஜாவை 36, கத்தியால் குத்தினர்.ரத்தக் காயங்களுடன் நான்கு வழிச்சாலைக்கு ஓடிவந்த செண்பகராஜாவை, சிலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்மையநாயக்கனுார் போலீசார, ராம்குமார், அருண்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X