மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல்

Added : மே 18, 2020
Share

பெரியகுளம் : பெரியகுளம் எம்.பி., அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் ரூ.63 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு அத்தியவாசிய பொருட்களை, முடிதிருத்துவோர், சலவை தொழிலாளிகள் 6,300 பேருக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொரு்டகளை வழங்கினார். விழாவில் ரவீந்திரநாத்குமார் எம்.பி., தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, நிர்வாகிகள் மணவாளன், சிவக்குமார், அன்பு, காஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

* தேனி மாவட்ட 'மக்கள் ரைட் பவுண்டேசன்' சார்பில் பெரியகுளம் மூன்றாந்தல், பாரதிநகர்,மாதாகோவில் தெரு, தெற்குதெரு தென்கரை, வடகரை தேரடி தெரு. தாமரைக்குளம், வடுகபட்டி பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மாவட்ட தலைவர் குமரகுருபரன், துணைத்தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் லுார்துசந்தியாகு, மாவட்ட தொடர்பு அலுவலர் டேவிட், இணைச் செயலாளர் விஜயகுமார் ஏற்பாடுகளை செய்தனர்.

* பெரியகுளம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் 200 பேருக்கு வாழைப்பழங்களை வழக்கறிஞர் மணி கார்த்திக் வழங்கினார். கமிஷனர் அசோக்குமார், நகர்நல அலுவலர் தினேஷ்குமார், சுகதார ஆய்வாளர்கள்அசன்முகமது, அலெக்ஸாண்டர், சமூக ஆர்வலர்கள் அன்புக்கரசன், முருகன், நித்தியானந்தம்,ராமமூரத்தி, சதீஷ்குமார் பங்கேற்றனர்.

* தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மாநில நிர்வாகி சித்ராதேவி தலைமையில், சோத்துப்பாறையில் 25 குடும்பங்களுக்கு ரூ.500 மதிப்பிலான மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது..

சின்னமனுார்: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி சார்பில் சின்னமனுாரை சேர்ந்த 500 குடும்பத்தினருக்கு ரூ. 800 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் சியாமளா, அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் நீதிமன்னன், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் சுந்தரேசன், செயலாளர் மூவேந்திரன், சேவா பிரமுகர் முருகேசன், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X