சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் தகராறில்கணவருக்கு வெட்டு; நான்கு பேர் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement

செம்பட்டி : எஸ்.புதுக்கோட்டையில் கள்ளக்காதல் பிரச்னையில், கணவரை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னாளப்பட்டி அருகே உள்ள மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரசாத் 25, கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி சாந்தி 22.மெத்தை நிறுவன உரிமையாளர் விஜயகுமார் 25, அடிக்கடி பிரசாத் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் சாந்திக்கும், விஜயகுமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை தட்டிக் கேட்ட பிரசாத்தை, விஜயகுமார் அவரது நண்பர்கள் மகேஷ்வரன் 24, மதன்குமார் 25, உதயகுமார் 25, ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினர்.பலத்த காயங்களுடன், பிரசாத் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரித்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், விஜயகுமார், அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X