பொது செய்தி

தமிழ்நாடு

படைப்புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை

Added : மே 18, 2020
Share
Advertisement

தேனி : மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த தேனி வேளாண் உதவி இயக்குனர் பூங்கோதை ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேனி தாலுகா சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, அல்லிநகரத்தில் மக்காசோளம் 30 நாள் பயிராக உள்ளது. இதில் படைப்புழு தாக்க வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த கோடை உழவு செய்வதால் மண்ணில் உள்ள முட்டை,கூட்டு புழுக்கள் அழியும். கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண் டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பெவேரியா பேசியானா மருந்தால் விதை நேர்த்தி செய்யலாம். இனக்கவர்ச்சி பொறிகள் வைக்கலாம். ஊடுபயிராக சூரியகாந்தி, எள், தட்டை பயிறு பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளை உருவாக்கிடலாம்.

20 நாள் பயிருக்கு அசாடிரக்டின் லிட்டருக்கு 20 மி.லி. நவில்யூரான்10 கிராம், எமாமெடிக்சன் பென்கோயேட் 5 எஸ்சி ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லி மருந்து குருத்துகளில் படும்படி தெளிக்க வேண்டும். 45 நாள் பயிருக்கு மெட்டாசியம் அனிசோபிலியே 10 லி. நீரில் 80 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். 65 நாள் பயிரில் புரூபென்டாமைடு 480 எஸ்.சி மருந்தினை 10 லி. நீரில் 5 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X