சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைரோடு வளைவுகளில் கண்ணாடிகள் சேதம் 

Added : மே 18, 2020
Share
Advertisement

பழநி : பழநி- - கொடைக்கானல் ரோடு வளைவுகளில் வாகன விபத்தை தவிர்க்க அமைக்கப்பட்ட 'குவியாடி'கள் சேதமடைந்துள்ளன.

பழநி- - கொடைக்கானல் ரோட்டில் ஆவின் பால் பண்ணையில் இருந்து தேக்கம் தோட்டம் வரை வளைவுகளில் மெகா சைஸ் கண்ணாடி அமைக்கப்பட்டு இருந்தது. ஒத்தக்கடை, தேக்கந்தோட்டம், வண்ணாந்துறை உள்பட பல பகுதிகளில் அமைக்கப்பட்டன. விபத்தை தவிர்க்கும் வகையில் வளைவு பகுதிகளில் வரும் வாகனங்களை கண்டு எச்சரிக்கையுடன் செல்ல இவை பயன்பட்டன.தற்போது அந்த கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் வளைவுகளில் விபத்து வாய்ப்பு அதிகமுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு வாகனங்கள் செல்வதாக இருந்தால் வளைவுகளில் வரும் வாகனங்களை அறிய முடியாது. எனவே, இந்த கண்ணாடிகளை உடனடியாக சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X