தமிழ்நாடு

கட்டுப்பாடில்லாத கடைகளால் தொற்று  நோய் பரவ வாய்ப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர், புறநகர் பகுதியில் சில கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்படுவதாலும் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதா என கேட்க தோன்றும் அளவுக்கு சில மீன், சிக்கன், மட்டன் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரீசியன் கடைகள், மெக்கானிக் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகள் பலவற்றில் சமூக இடைவெளியை கண்டுகொள்வதே கிடையாது. பணியாளர், மக்கள் முகக்கவசம் அணிவதில்லை.

குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக கடைகள் செயல்படுகிறது எனப்புகார் எழுந்துள்ளது. இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.தற்போது மே 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கட்டுப்பாடுகளை மீறும் கடைகள் மீது போலீசார், வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X