பொது செய்தி

இந்தியா

விமான போக்குவரத்து இல்லை: 'ஏர் இந்தியா' அறிவிப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Air India, lockdown, coronavirus lockdown, coronavirus, domestic flights, ஏர் இந்தியா, விமான போக்குவரத்து

புதுடில்லி: 'உள்நாட்டு விமான போக்குவரத்தை மே 31ம் தேதி வரை துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சரக்கு விமான சேவைகளை தவிர்த்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் மார்ச் 25ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஏர் இந்தியா' விமானங்கள் மே 7 - 15ம் தேதி வரை பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு அங்கு தவித்த தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.


latest tamil newsதற்போது பல்வேறு மாநிலங்களில் நான்காம் கட்டமாக இன்று முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் 'மே 31ம் தேதி வரை உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு விமான சேவை மற்றும் சரக்கு விமான சேவைக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் 'வந்தே பாரத்' திட்டத்தில் ஜூன் 3ம் தேதி வரை 'ஏர் இந்தியா' சிறப்பு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghavan.G - coimbatore,இந்தியா
18-மே-202009:27:34 IST Report Abuse
Raghavan.G Local flight services are required to facilitate the passenger , who are coming from abroad in vande barat mission, to travel to their home city. If it is stopped how they will travel. So it has to be started.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
18-மே-202007:23:10 IST Report Abuse
Unmai Vilambi எவ்வளவோ நாடுகள் விமான சேவை துவக்கி விட்டது. நம் இந்தியர்கள் பணம் சம்பாதித்து நாட்டிற்கு எடுத்து வர குடும்ப சுகங்களை இழந்து வெளிநாடுகளில் திக்கி தவிக்கின்றனர். OCI கார்டு காரர்கள் எவ்வளோவோ பேர் இந்தியாவிர்கு குலம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் இப்பொழுது வெளிநாட்டிற்கு சென்று PROJECT அல்லது BUSINESS எடுத்து வர சென்றுள்ளனர். அரசின் OCI கார்டு ரத்தினால் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் இந்தியா மக்களுக்கு வேலை கொடுப்பவர்கள். அரசின் இந்த முடிவால் அவர்கள் நம்பிக்கை இழந்து அனாதைகளாக தவிக்கின்றனர் வெளிநாடுகளில். கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சாராய கடை திறக்கும் இந்த அரசிற்கு அங்கே சிக்கி தவிக்கும் மக்களை கூட்டி வர வேண்டும் என்று அக்கறை இல்லை OCI காரர்கள் இந்தியா பக்கம் திரும்ப வருவார்களா இந்த அரசை நம்பி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X