அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலா

Added : மே 18, 2020
Share
Advertisement
நிவாரணம் வரவில்லைசெல்லுார் அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோயில் தெருவில் 50 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை எந்த நிவாரணப் பொருட்களும், நிதியுதவியும் கிடைக்கவில்லை. இங்குள்ள பலர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா.-- தங்கம், பாலமுருகன் கோயில் தெருஐஸ் வியாபாரிகளுக்குஅனுமதி

நிவாரணம் வரவில்லை

செல்லுார் அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோயில் தெருவில் 50 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை எந்த நிவாரணப் பொருட்களும், நிதியுதவியும் கிடைக்கவில்லை. இங்குள்ள பலர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா.-- தங்கம், பாலமுருகன் கோயில் தெரு

ஐஸ் வியாபாரிகளுக்குஅனுமதி கிடைக்குமா

கொரோனா ஊரடங்கால் ஐஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த நிதியுதவி, நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை. ஐஸ் வியாபாரம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.- தனலட்சுமி, காளவாசல்.

ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை

மதுரை எஸ்.எஸ்.காலனி எண் 1 ரேஷன் கடையில் மூன்று மாதங்களாக போதிய உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை. இதுகுறித்து ஊழியர்கள், 'இருப்பு இல்லை,' என பதிலளிக்கின்றனர். வயதானவர்களை அலைக்கழிக்கின்றனர். பாரதியார் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சி நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வருவதில்லை.- கிருஷ்ணவேணி, எஸ்.எஸ்.காலனி.

நல வாரிய உதவிகள்வழங்குவது எப்போது

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தையல், பொற்கொல்லர் உள்ளிட்டோருக்கு எட்டு மாதங்களாக எந்த நிதியுதவியும், ஓய்வு தொகையும் கிடைக்கவில்லை. ரேஷனிலும் நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில்லை. 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.- ராஜலட்சுமி, மேற்கு மாசி வீதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X