தமிழ்நாடு

சமூக இடைவெளி பின்பற்றி விதிகளை பின்பற்ற வேண்டும்; மாநகராட்சி எச்சரிக்கை

Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சமூக இடைவெளி பின்பற்றி விதிகளை பின்பற்ற வேண்டும்; மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை : மதுரையில் கொரோனா ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோர் சமூக இடைவெளி பின்பற்றி விதிகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. விதிகளை பின்பற்றாதவர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடர்கிறது.

நகரில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க மாட்டுத்தாவணி, பரவை காய்கறி மொத்த மார்க்கெட்டுகள் பிரித்து நடத்தப்படுகின்றன. சர்வேயர்காலனி 120 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சந்தைகளும் செயல்படுகின்றன. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாலும் உள்ளனர்.


வர்த்தக நிறுவனங்களும்


இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளனர். கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் அதிகாரிகள் அவ்வவ்போது ஆய்வு நடத்தி விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நேற்று சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் அதிகாரிகள் கீழ மாசி, ஆவணிமூலவீதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். ஆறு பலசரக்கு கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இதனால் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

கடை உரிமையாளர்கள் மீது விளக்குத்துாண் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை தொடரும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
18-மே-202009:46:27 IST Report Abuse
Loganathan Kuttuva பலர் இந்த விதிகளை தங்கள் கடைகளுக்கு முன் தெளிவாக எழுதியுள்ளார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X