சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறைச்சி பறிமுதல்

Added : மே 18, 2020
Share
Advertisement

மதுரை : மதுரைமாநகராட்சி பகுதியில் நேற்று இறைச்சி, மீன் விற்பனை செய்ய கலெக்டர் வினய் தடை விதித்திருந்தார்.இதை மீறி பல இடங்களில் விற்பனை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவின்படி மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கரிமேடு, மஞ்சள்மேடு காலனியில் மீன், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. அக்கடைகளில் இருந்து 250 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இருப்பினும் சில வியாபாரிகள் வீடுகளில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சியை கார்களில் எடுத்து சென்று விற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X