பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்கள் இயக்கம் எப்போது? அரசு உத்தரவுக்கு காத்திருப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
TNSTC, Bus, Bus service, tamil nadu, tn news, coronavirus lockdown, coronavirus tamil nadu,
 பஸ், எப்போது

சென்னை: பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள், அரசு உத்தரவுக்கு காத்திருக்கின்றன.

'கொரோனா' பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலானது. இதனால் தமிழகத்தில் அரசு பஸ்களின் இயக்கம் தடைபட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களை அழைத்துச்செல்லும் பஸ்களை தவிர, மற்ற அனைத்து பஸ்களும், எட்டு கோட்டங்களின், 320 பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு மாதத்தில், போக்குவரத்து கழகங்களுக்கு, 1,250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், பஸ் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக தகவல் பரவியது. இதனால் எட்டு கோட்டங்களிலும் ஆயத்தபணி நடந்தது. அத்துடன் அலுவலக, தொழில்நுட்ப பணியாளர் மற்றும் டிரைவர், கண்டக்டர்களில், 50 சதவீதம் பேர் பணிக்கு அழைக்கப்பட்டனர். இன்று (மே 18) பஸ்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஸ்கள் இயக்கம் குறித்து, முதல்வர் எதுவும் தெரிவிக்கவில்லை.


latest tamil news


இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அனுமதி அளித்தால், பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் தயாராகவுள்ளன. விரைவில் பஸ்களை இயக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.


அமைச்சரிடம் நிர்ப்பந்தம்


பஸ்களை இயக்கினால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தனியார் பஸ் உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இதனால் அரசு பஸ்களின் இயக்கம் தடைபட்டுள்ளதாக, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே, விரைவில் கட்டணம் உயர்த்தப்பட்டு, பஸ்கள் இயக்கத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
18-மே-202012:20:08 IST Report Abuse
Sivagiri இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கொண்ட ரயில்-பஸ் விடலாம் - - ரயில் ட்ராபிக் அதிகம் இல்லாத வழித்தடங்களில் மாநில அரசுகளே ரயில் தடங்களை வாடகைக்கு எடுத்து குறைந்த கட்டணத்தில் பேஸஞ்சர் ரயில்-பஸ் விடலாம் . . . ரயில்வே-க்கும் மாநில அரசுக்கும் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைக்கும் - - மக்களுக்கும் உடம்பு வலி இல்லாமல் போக்குவரத்துக்கு வசதி கிடைக்கும் . . .
Rate this:
krish - chennai,இந்தியா
18-மே-202014:00:11 IST Report Abuse
krishஆவின் பால் கார்டு போல், இணையத்தளத்தில் மாத கட்டணம் (10 % கூடுதலாக) வசூலித்து எல்லா ரயில்களையும் விடலாம். அத்தியாவசியம் கருதி பயணிப்பவர் பிரயாணம் செய்ய வசதியாக இருக்கும். பள்ளிகள், கல்லூரிகள் இயங்காத நிலையில், நெரிசல் குறைவாகவே இருக்கும். பயண சீட்டு விற்பனையையும் இரயில் நிலையங்களில் ஊரடங்கு முடியும் வரை தவிர்க்கலாம். நெரிசலில் ஏற்படும் தொற்றை குறைக்கலாம்....
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-மே-202014:33:53 IST Report Abuse
தமிழ்வேள்எத்தனைபேர் இணையத்தையும் யுடிஎஸ் ஆப் ஐயும் பயன்படுத்துகிறார்கள்? ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் என்றும் தேவை ....நூறு சதம் இணையத்தை நம்பி இயங்க இயலாது .. ஸ்மார்ட் போன் இல்லாதவன் தேவையற்றவன் வாழ தகுதியற்றவனா என்ன ?...
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
18-மே-202011:42:46 IST Report Abuse
Krishna Privatise & Increase Bus Services Throughout India- Subsidise Only Low Traffic- Routes-Early Morning-Late Night BusesBus Fares Will Come Down
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-மே-202010:44:40 IST Report Abuse
தமிழ்வேள் 'மத்திய அரசு ரயில் போக்குவரத்தை துவக்க தயாராக உள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் விரும்பவில்லை ' என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியிருந்தார் ..இந்த பஸ் கட்டண உயர்வு கோரிக்கை மற்றும் குறைந்த அளவு பயணிகள் இயக்கம் ஆகியவற்றோடு அமைச்சர் பேட்டியையும் இணைத்து பார்த்தால் மாநில அரசுகளின் பண வெறி புரியும் ...மாநில அரசுகள் மக்கள் நலனுக்கு அப்பாற்பட்டவையாக மாறி வெகுகாலமாகிவிட்டது ..சாராய விற்பனைக்கான அரசு மட்டுமே மாநில அரசு [இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X