சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : மே 18, 2020
Share
Advertisement
10 பவுன் நகைபறிப்புமதுரை: உத்தங்குடி மாடசாமி. தனியார் மருத்துவமனை பிஸியோதெரபிஸ்ட். நேற்று முன் தினம் வீட்டின் முன் காலை 8:30 மணிக்கு இவரது மனைவி வேல்மயில் 25, கோலம் போட்டார். பின்னால் நடந்து சென்ற 25 வயது நபர், வேல்மயிலின் 10 பவுன் செயினை தலை வழியாக கழற்றிக்கொண்டு ஓடி, டூவீலரில் தயாராக இருந்த கூட்டாளியுடன் தப்பினார். புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.கொள்ளை திட்டம்8 பேர்

10 பவுன் நகைபறிப்பு

மதுரை: உத்தங்குடி மாடசாமி. தனியார் மருத்துவமனை பிஸியோதெரபிஸ்ட். நேற்று முன் தினம் வீட்டின் முன் காலை 8:30 மணிக்கு இவரது மனைவி வேல்மயில் 25, கோலம் போட்டார். பின்னால் நடந்து சென்ற 25 வயது நபர், வேல்மயிலின் 10 பவுன் செயினை தலை வழியாக கழற்றிக்கொண்டு ஓடி, டூவீலரில் தயாராக இருந்த கூட்டாளியுடன் தப்பினார். புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொள்ளை திட்டம்8 பேர் கைது

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு சரவணன் மாட்டுக்கொட்டகையில் கத்தியுடன் சிலர் இருப்பதாக இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பதுங்கியிருந்த 8 பேரை கைது செய்தனர். விசாரணையில் அப்பகுதியைசேர்ந்த 'கம்மா'சரவணன் 43, இருட்டு மணி 25, ராமசுப்பிரமணியன்25, விக்னேஷ் 19, காளிமுத்து 31, மணிகண்டன் 40, எனத்தெரிந்தது. இவர்களும், தப்பிய மன்னாரு கார்த்தி, வில்லாபுரம் கறிக்கடை மணியும் சேர்ந்து ெகாள்ளையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது.

குழந்தை இறப்பில் சந்தேகம்

மதுரை: மேலஅனுப்பானடியில் ேநற்று முன் தினம் சிவக்குமார் மனைவி சாலாட்சி, 8 மாத குழந்தை சிவதர்ஷனை இடுப்பில் வைத்துக்கொண்டு கிணற்றில் தண்ணீர் இறைத்தபோது, குழந்தை தவறி கிணற்றில் விழுந்து இறந்தது. கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் குழந்தை கிணற்றில் வீசி கொலை ெசய்யப்பட்டதா என தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் 'சந்தேக மரணம்' என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருமகள் தற்கொலைமூவர் மீது புகார்

மதுரை: கரும்பாலை வீரலட்சுமி 20. இவரது கணவர் முருகேசன் 2 மாதத்திற்குமுன் விபத்தில் இறந்தார். ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சம்பெறுவது தொடர்பாக வீரலட்சுமியை மாமியார் மீனாட்சி, நாத்தனார் நாகஜோதி, கணவர் முத்துபாண்டி ஆகியோர் வார்த்தைகளால் துன்புறுத்தினர். வீரலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மூவரிடமும் அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.42.39 லட்சம்நுாதன திருட்டு

மதுரை: பசுமலையில் கொரியாவில் இருந்து டெக்ஸ்டைல் இறக்குமதி செய்யும் பென்குயின் அப்பர்லஸ் நிறுவனம் உள்ளது. இதன் இமெயிலை 'ேஹக்' செய்து வங்கி பரிவர்த்தனை கொண்ட விபரங்களை மர்மநபர் அனுப்பினார். கொரியா நிறுவனம்தான் அனுப்பியுள்ளது எனக்கருதி நிறுவனம் தரப்பில் ரூ.42.39 லட்சத்தை மர்மநபரின் வங்கி கணக்கு மாற்றி நிர்வாகம் ஏமாந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலரில் வந்து வழிப்பறி

மதுரை: பீ.பீ.குளம் ஹரிஹரமணிகண்டன் 26. சகோதரி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணிக்கு டூவீலரில் மதுரை நோக்கி வந்தார். ஒத்தக்கடை ராஜகம்பீரம் நான்குவழிச்சாலையில் டூவீலரில் வந்த 3 பேர் வழிமறித்து 2 பவுன் நகை, ரூ. 2 ஆயிரம், ஒரு அலைபேசியை வழிப்பறி செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

பீகார் வாலிபர் மாயம்

கப்பலுார்: சிட்கோ தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தங்கி பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார் 19, உதவியாளராக வேலை செய்தார். மே 13 வெளியில் சென்றவர் திரும்பவில்லை. நிறுவன மேலாளர் சுகுமார் புகாரின்படி திருமங்கலம் நகர் போலீசார் அவரை தேடுகின்றனர்.

மதுபாட்டில்களுடன்ஒருவர் கைது

திருமங்கலம்: சிந்துபட்டி அருகே மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாட்டாமங்கலம் குணசேகரன் 39, விற்க 245 மதுபாட்டில்களை டூவீலரில் கொண்டு சென்றார். மதுபாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து சிந்துபட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

டூவீலர்கள் மோதல்ஒருவர் பலி

டி.கல்லுபட்டி: லாலாபுரம் ராகவேந்திரன் 28, மதுரை தனியார் மருத்துவமனை பார்மசிஸ்ட் ஆக பணிபுரிந்தார். இவரும் நண்பர் பாலமுருகனும் 29, எம்.புளியங்குளத்திற்கு டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) சென்றனர். காசிபுரம் அருகே எதிரே வில்லூர் அருண் 30 (ெஹமெட் அணியவில்லை) ஓட்டி வந்த டூவீலர் ராகவேந்திரனின்டூவீலரில் மீது மோதியது. இதில் ராகவேந்திரன் இறந்தார். பாலமுருகன், அருண் காயமுற்றனர். வில்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

காப்பீடு நிறுவனமுகவர் கொலை

வாடிப்பட்டி: சமயநல்லுார் கட்டப்புளிநகர் அருகே மதுரை எஸ்.எஸ்.காலனி தனியார் காப்பீட்டு நிறுவன ஏஜன்ட் சிவக்குமார் 52, அடித்து கொலை செய்யப்பட்டு பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளித்த பெண் பலி

அலங்கநல்லுார்: நல்லையா நாயக்கர் தெரு கட்டட தொழிலாளி சிவகுமாரன் 43, மே 7 ல் மது அருந்தி விட்டு போதையில் தகராறு செய்ததால் மனைவி பரமேஸ்வரி 38, மகள் அர்ச்சனா 18, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் தாய் பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இவரது மகள் அர்ச்சனா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

ஆசிட் குடித்து தற்கொலை

மதுரை: சிம்மக்கல் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் ஆட்டோ டிரைவர் சுந்தரராஜன் 57. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாத்ரூமில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X