சீனாவில் பள்ளிகள் திறப்பு; விமான போக்குவரத்தும் துவங்கியது

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பீஜிங்: கொரோனா வைரசால், சீனாவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. விமான போக்குவரத்தும் துவங்கியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின், வூஹான் நகரில், முதல் முதலாக கொரோனா வைரஸ் உருவாகி, மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, சீனாவில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.வூஹான், பீஜிங், ஷாங்காய் ஆகிய முக்கிய

பீஜிங்: கொரோனா வைரசால், சீனாவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. விமான போக்குவரத்தும் துவங்கியுள்ளது.latest tamil news


ஒரு மாதமாக வைரஸ் பரவல் குறைந்து வருவதால், பெரும்பாலான சீன நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டன. ஷாங்காய் நகரில் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. அந்த நகரில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கியது. பொழுதுபோக்கு இடங்களையும், சுற்றுலா தலங்களையும் விரைவில் திறக்க ஏற்பாடு நடக்கிறது. நேற்று 5 பேருக்கு பாதிப்பு உறுதி ஆனது. அதை சேர்த்து சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டனர். 4,634 பேர் இறந்தனர்.

நம் அண்டை நாடான சீனாவின், வூஹான் நகரில், முதல் முதலாக கொரோனா வைரஸ் உருவாகி, மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, சீனாவில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.வூஹான், பீஜிங், ஷாங்காய் ஆகிய முக்கிய நகரங்களில், அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கியது. பள்ளி, கல்லுாரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

கடந்த ஒரு மாதமாக வைரஸ் பாதிப்பு கணிசமாக குறையத் துவங்கியதை அடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டன.சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில், நேற்று முதல், உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்கின. ஷாங்காயிலிருந்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் துவங்கியுள்ளது. முதலில் குறைந்த அளவில் இயங்கிய விமானங்கள், தற்போது, 60 சதவீதம் அளவுக்கு இயங்குகின்றன. கோடை விடுமுறை காலம் என்பதால், அடுத்த சில நாட்களில், பொழுதுபோக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், சுற்றுலா தலங்களையும் திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏற்பாடுகள் நடந்தாலும், மற்றொரு புறம், நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 82 ஆயிரத்து, 947 ஆக அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை, 4,634 ஆக உள்ளது.சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil newsஇதுதவிர, 519 பேர், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்லாமபாத்: அண்டை நாடானா பாகிஸ்தானிலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.இருப்பினும், சில நாட்களாக, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-202019:26:21 IST Report Abuse
A.George Alphonse "பாட்டும் நானே,பாவமும் நானே" என்று இந்த சீனாக்காரன் பாடுவதுபோல் இருக்கிறது இந்த செய்தி.
Rate this:
Cancel
18-மே-202013:02:01 IST Report Abuse
டுமீலன் இவனுங்க மனித குல விரோதிகள்... தன் நாட்டிலிருந்து பரவிய நோயை வைத்து பணம் சம்பாதிக்க விரும்பும்..மிருகங்கள்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-மே-202007:55:39 IST Report Abuse
S.Baliah Seer ஆமாம் இந்த விமான போக்குவரத்து யாருக்கு?வெளிநாட்டிலுள்ள சீனர்களை அழைப்பதாய் இருந்தால் மட்டுமே இது சரியாகும்.சீனாவிலிருந்து எந்த பயணிகளும் தங்கள் நாட்டில் நுழையாதவாறு மற்ற நாடுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.உதாரணமாக சீனாவில் இருக்கும் இந்தியர்கள் சில மாதங்கள் அங்குதான் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X