பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட்டன

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
coronavirus, Tamil Nadu, government offices, coronavirus lockdown, lockdown 4.0

சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று(மே 18) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் பணியை துவக்கினர். மேலும் வாரத்தின் ஆறு நாட்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளது. எப்படி செயல்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது.

* தமிழக அரசு அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம் போல செயல்பட துவங்கியது. சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்

* அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர். முதல் பிரிவு ஊழியர்கள் திங்கள் செவ்வாய்; இரண்டாம் பிரிவு ஊழியர்கள் புதன், வியாழன் பணியாற்ற வேண்டும். மீண்டும் முதல் பிரிவு ஊழியர்கள் வெள்ளி, சனி பணியாற்ற வேண்டும்


latest tamil news* அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் இரண்டாம் பிரிவு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்

* 'குரூப் - ஏ' பிரிவு அலுவலர்கள் வாரத்தின் ஆறு நாட்களும் பணிக்கு வர வேண்டும். அனைத்து பணியாளர்களும் அலுவலக பணிகளை கவனிக்க மின்னணு தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

* சுழற்சி முறை பணி அனைத்து அரசு அலுவலகங்கள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்

* ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புகளை பின்பற்றி, அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட துவங்க உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
18-மே-202014:49:20 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI பத்திரப்பதிவு அலுவலகத்தை நினைத்தாலே பயமா இருக்கு லஞ்சத்துலேயே மூழ்கி இருப்பார்கள் இரண்டு மாதமா ஒன்னும் இல்லையா பத்திரப்பதிவு க்கு வருபவர்கள்பாடு ஐயோ பாவம்
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
18-மே-202012:21:15 IST Report Abuse
 Sri,India வாங்கி வாங்கி சிவந்த கரங்கள் .....இன்று முதல் கை நடுக்கம் குறையும் .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202011:28:52 IST Report Abuse
Lion Drsekar அலுவலகங்கள் வேலை செய்கிறது, வேலை யார் செய்வார்கள்? அரசு வேளையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரிடம் இது பற்றி பேசினேன் அவர் கூறிய கருத்துக்கள், இன்றைக்கு நீங்கள் அனைவரும் நினைப்பது போல் எந்த வேலையும் உடனடியாக நடக்காது. எந்த பதவியில் இருந்தாலும் கேழே பணியாற்றுபவர்களிடம் அந்த பைலை எனக்கு அனுப்புங்கள் என்றால் உடனடியாக அவர், ஐயா அவர் விடுமுறையில் இருக்கிறார் என்பார், அவர் வேலைக்கு வந்ததும், மீண்டும் நினைவுபடுத்தவேண்டும், அவர் ஐயா, நான் கூறிவிட்டேன், கோவிக்கவேண்டாம், அவர் நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் நீங்கள் கேட்டால்தான் கொடுப்பர் போல் இருக்கிறது என்பார், பிறகு அவரை நேரடியாக அழைத்து கேட்டால் அடுத்த சில மணி நேரங்களில் பைலை கேட்ட அதிகாரி ஒன்று மாற்றப்படுவார் அல்லது விடுமுறையில் செல்ல வேண்டிய ஒரு நிலை, இப்படி இருக்கும் பொது நாங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு சென்று வீடு வருவதற்குள் நொந்து நூலாகிக் கொண்டு இருக்கிறோம். அதே போன்று ஒரு விசாரணை என்றால் முதல் நாள் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து மீண்டும் உள்ளே வைக்கும்போது அதில் சில பக்கங்கள் காணாமல் போகும், மறுநாள் வாங்கி உள்ளே வைத்த அந்த நபர் அதிகாரியிடம், நான் தங்களிடம் கொடுக்கும் போது இருந்ததே ஐயா, தற்போது காணவில்லை என்கிறார், இந்த நிலையில் பொது மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது, வாங்கும் சம்பளத்துக்கு நேர்மையாக வேலை செய்ய முடியாத ஒரு நிலையில் இருப்பது பற்றி மேலும் பல கருத்துகளையும் கூறினார், அதில் ஒரே ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்தேன், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X