மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சி; காங்., பாய்ச்சல்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Congress, Anand Sharma, pm modi, narendra modi, Nirmala sitharaman, காங்கிரஸ்

புதுடில்லி: சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது என மத்திய அரசின் திட்டங்களை காங்., கட்சி விமர்சித்துள்ளது.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், ஐந்து நாட்களில், 20.98 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து காங்., செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது: மக்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சி நடந்துள்ளது. அரசு அறிவித்துள்ளது, வெறும், 3.22 லட்சம் கோடிக்கான திட்டங்களே. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.6 சதவீதம் மட்டுமே, இந்த திட்டங்கள். ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும்.

ஆனால், சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது. தன் அறிவிப்புகள் எந்த வகையில், மக்களுக்கு உதவும் என்பது குறித்து விவாதிக்க, நிர்மலா சீதாராமன் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
19-மே-202006:16:31 IST Report Abuse
 Muruga Vel அபிஷேக் சிங்கவி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக ரெண்டு மூணு நாள்களாக செய்தி வந்ததே ..
Rate this:
Cancel
sharmilaagopu - mysore,இந்தியா
18-மே-202023:04:58 IST Report Abuse
sharmilaagopu இது கொரோனா காலம் இந்த நேரத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு நிம்மி மேடம் நிவாரண தொகையாக என்ன கொடுத்தார்? அதாவது இன்றைய வயித்து வலிக்கு ஒரு வாரம் கழித்து மருந்து கொடுப்பாராம். நிதி மந்திரி நிம்மி மேடம் இப்போது வாசித்தது கொரோனா நிவாரணமா? அல்லது பட்ஜெட்டில் விட்டு போன பக்கங்களா? பட்ஜெட்டுக்கு முன்னரே ஜி டி பி வீழ்ந்துவிட்டது அதை சரி செய்ய அப்போதே எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை ஆட்டோ மொபைல் தொழில் பின்னலாடை தொழில் ஏன் சென்செக்ஸே பத்தாயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது சிறு குறு தொழில்கள் எல்லாம் நசுங்கி மூடி கொண்டிருந்த வேளையில்தான் கொரோனா வந்தது.என்னமோ கொரோனாவினால்தான் நம் நாடு பேரிழப்பை சந்தித்துள்ளதுபோல் ஒரு டிராமா எதற்கு? இந்த அரசின் பல தோல்விகளை மூடி மறைக்கும் செயலில் இறங்கி தோற்றிருக்கிறார் அம்மையார் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்ற பழமொழிக்கு உயிர் கொடுத்துள்ளார் அம்மையார் இனிப்பு என்று ஒரு எலிப்புழுக்கை மிட்டாய் கூட எந்த ஏழைக்கும் கொடுக்காமல் கடன் கடன் கடன் என்று சொல்வது சொல்கிறார் நிம்மியம்மா ஆனால் கடன்பட்டார் நெஞ்சம் போல் கையில் ஒன்றுமில்லாமல் மக்கள்......இதை ஆனந்த் சர்மா ஒரு சிறந்த எதிர் கட்சியின் குரலாய் ஒலித்திருக்கிறார்..
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
18-மே-202019:40:40 IST Report Abuse
Nathan எதையாவது சொல்லி மக்களை குழப்புவார். ஐயோ வடை போச்சே கதையாக ஆட்டைய போட முடியாத ஆத்திரத்தில் எகிர்றார். தெபிலித்தனமே குறியாக கொண்ட வர்க்கம். நாட்டுக்கு தேவையில்லாத கும்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X