மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சி; காங்., பாய்ச்சல்| Cong hits back at FM on Rahul, Sonia jibe | Dinamalar

மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சி; காங்., பாய்ச்சல்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (18)
Share
புதுடில்லி: சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது என மத்திய அரசின் திட்டங்களை காங்., கட்சி விமர்சித்துள்ளது.ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர்,
Congress, Anand Sharma, pm modi, narendra modi, Nirmala sitharaman, காங்கிரஸ்

புதுடில்லி: சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது என மத்திய அரசின் திட்டங்களை காங்., கட்சி விமர்சித்துள்ளது.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு துறைகளை, மக்களை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார அறிவிப்புகள் வெளியிடப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், ஐந்து நாட்களில், 20.98 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து காங்., செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது: மக்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சி நடந்துள்ளது. அரசு அறிவித்துள்ளது, வெறும், 3.22 லட்சம் கோடிக்கான திட்டங்களே. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.6 சதவீதம் மட்டுமே, இந்த திட்டங்கள். ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும்.

ஆனால், சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது. தன் அறிவிப்புகள் எந்த வகையில், மக்களுக்கு உதவும் என்பது குறித்து விவாதிக்க, நிர்மலா சீதாராமன் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X