கொரோனாவால் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு: பஞ்சாப் முதல்வர்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
Punjab, AmarinderSingh, Lose, Revenue, CoronaVirus, COVID-19, பஞ்சாப், அமரீந்தர்சிங், வருவாய், இழப்பு

சண்டிகர்: கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் இந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பி.டி.ஐ.,க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒவ்வொரு மாதமும் பொருளாதாரத்தில் ரூ.3,000 கோடியை இழந்து வருகிறோம். ஏப்., மாதத்தில் மட்டும் ஊரடங்கால், எங்கள் மதிப்பிடப்பட்ட வருவாயில் 88 சதவீதத்தை இழந்தோம். மேலும், இந்த முழு ஆண்டிற்கும் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரதம் கோடி இழப்புகள் ஏற்படும்.

வேலை இழப்புகளை பொறுத்தவரை, ஆரம்ப மதிப்பீடுகளின் படி, சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஆனால், கொரோனா நிலை முடிவடையத் தொடங்கிய பின்னரே தெளிவு வரும்.


latest tamil news



நிதி நிலைமை மிகவும் சிக்கலானது. அனைத்து அத்யாவசியமற்ற துறைகளும் செலவினங்களை குறைத்து, செலவுகளை நியாயமான முறையில் நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அது போதுமானதாக இல்லை, எனவே நாங்கள் புதிய வரிவிதிப்பு போன்ற சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

இது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான முடிவு எட்டப்படும். ஜி.எஸ்.டி, கலால் வரி அல்லது போக்குவரத்திலிருந்து வரும் வாட் இல்லாமல், அனைத்து வளங்களும் வறண்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X