முதல்வர் பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவால் இந்தியா மட்டுமன்றி, பல உலக நாடுகள், மிகப் பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. நம் நாட்டில், இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர, பிரதமர் மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், என்ன திட்டங்கள், அதற்கு எவ்வளவு பணம் என்பதை, விரிவாக அறிவித்தார்.இந்நிலையில்,
Modi, Narendra Modi, Edappadi Palanisamy, tamil nadu cm, pm modi,
நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: கொரோனாவால் இந்தியா மட்டுமன்றி, பல உலக நாடுகள், மிகப் பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. நம் நாட்டில், இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர, பிரதமர் மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், என்ன திட்டங்கள், அதற்கு எவ்வளவு பணம் என்பதை, விரிவாக அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய, முதல்வர், இ.பி.எஸ். மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளார். இதோடு நிற்காமல், பொருளாதாரப் பிரச்னையிலிருந்து மீள என்ன வழி என்ன என்பதை ஆராய, உயர் மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி.ரங்கராஜன் தலைமையிலான இந்தக் குழு, மூன்று மாதங்களுக்குள், தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.


latest tamil newsஇந்த விஷயம், பிரதமர் மோடிக்கு தெரிந்ததும், இ.பி.எஸ்.,சுக்கு போன் போட்டு, அவரை பாராட்டினாராம். 'ரங்கராஜன் விஷயம் தெரிந்தவர்; மிகவும் திறமையானவர்; சரியான நபரைத்தான் தேர்வு செய்துள்ளீர்கள். அவர், தமிழகத்திற்கு நல்ல வழி காட்டுவார். இது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானலும் தயங்காமல் கேளுங்கள்' என போனில் சொன்னாராம் மோடி.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202021:20:45 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி கோரானோவை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் டெல்லிவரை சென்று கோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்று டாஸ்மாக்கை திறந்து தமிழக குடிமக்களுக்கு பேருதவி புரிந்துள்ளார். இதற்காகவேணும் முதல்வரை இந்திய பிரதமர் ஜனாதிபதி எல்லோருமே பாராட்ட வேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-202018:25:13 IST Report Abuse
J.V. Iyer மற்றவர்களை பாராட்ட பரந்த மனம் வேண்டும், சிறந்த குணம் வேண்டும். இது மோடிஜியிடம் நிறைய உள்ளது. பூவுடன் சேர்ந்த நாரைப்போல முதல்வர் பழனிசாமி திகழ்கிறார்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-மே-202017:34:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாட்டின் ஸ்பெஷாலிட்டி என்ன என்றால் அரசே குடிக்கவைப்பதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X