முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
கோல்கட்டா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.மேற்கு வங்க முதல்வர், மம்தா பேசும் போது, 'கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என்
Mamata, Mamata Banerjee, Modi, PM modi, coronavirus, மோடி, மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பேசும் போது, 'கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என் மாநிலத்தில், மத்திய அதிகாரிகள் குழுவை அனுப்பி, பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என, சத்தம் போட்டு பேசினாராம். 'இது முதல்வர்கள் கூட்டமா அல்லது கோல்கட்டாவில் நடக்கும் அரசியல் கூட்டமா' என, பிரதமருடன் அமர்ந்திருந்த சில அமைச்சர்கள் ஆதங்கப்பட்டனர்.


latest tamil newsஆனால், பிரதமரோ, மம்தாவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். உடனே பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், 'ஒவ்வொரு முதல்வரும் நீண்ட நேரம் பேசினால், இந்த கூட்டம் முடிய, இரவு, 11:00 மணி ஆகிவிடும்; எனவே, யாரும் ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது' என, சொன்னாராம். மோடியும், 'இது சரியான யோசனை' என்றாராம். இதற்குப் பின்தான் பேச்சை முடித்திருக்கிறார், மம்தா.

தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடம், 'எதுக்கு அந்த அம்மா இப்படி கத்தறாங்க?' என கேட்டாராம். இந்தக் கூட்டத்தில், ஹிந்தி தெரிந்த சில அதிகாரிகள், முதல்வர் இ.பி.எஸ்.,சுடன் இருந்தனர். அவர்கள், மொழி பெயர்த்து, முதல்வருக்கு விளக்கினார்களாம்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-மே-202011:46:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni சிலருக்கு மைக் கண்டால் கண்ணாபின்னானு பேசிண்டேஇருக்க தோணும் வியாதி உண்டு, முக /ஜெயா /நெடுஞ்செழியன் போல சில உதாரணம் இரத்தின சுருக்கமா பேசுவோர் லிஸ்ட்லே முன்னாள் முதல்வர் காமராசர் ஐயா ஆர் வெங்கடராமன் துக்லக் சோ பலர் இருந்தாங்க சிலர் எவ்ளோபேசினாலும் கேட்க அவ்ளோ நன்னாயிருக்கும் அனாவசியமா எதுவும் பேசாமல் கரெக்ட்டாக பேசுவதில் சம்பத் பெஸ்ட்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-202018:27:33 IST Report Abuse
J.V. Iyer அதிகமா கோவப்பட்ட பெண் வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது.
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
18-மே-202018:24:55 IST Report Abuse
Krish சொல்வதோ ' சோனோ பெங்கால் ' அதாவது ' பெங்கால் ஒரு தங்கம் ' வழமையான மாநிலம். பல பல அறிஞ்சர்களை [ நிஜ அறிஞ்சர்கள் ] , நோபல் பரிசு பெற்றவர், விவேகாநத ராமகிருஷ்ண பரமஹம்சர் , ராஜா மோகன் ராய் போன்ற சமூக மாற்ற பெரியவர்கள் , போஸ் என்ற ஐன்ஸ்டன் சமமான விஞ்சானி , சர் சி வி ராமனின் படைப்புக்கு வித்திட்ட பூமி இந்த பெங்கால் . இப்போதோ 'பொய் பாருங்கள் தெரியும் ' முன்பு தென்னகத்தில் இருந்து வடதேசம் முக்கியமாக பங்காலுக்கு மக்கள் ' வேலை தேடி ' போவர் , ஆனால் இப்போதோ அங்கிருந்து தமிழகம் கேரளா கர்நாடகம் ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு ' தின கூலிக்காக பங்காளிகள் படை எடுக்கின்றனர் ' என்ன பரிதாபம் . இந்த அம்மா 'கத்துவது ,கோபப்படுவது , நிதானம் இழப்பது ,மற்றும் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தோழிகூடங்களையும் மூடுவது போன்றவை நடக்கின்றன .. இஇதுதான் காலத்தின் விளையாட்டோ ???
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
19-மே-202006:02:24 IST Report Abuse
Nathanசோனோ பெங்காலை மெய்முனா ஆக்குவது சோனாகாட்டி பெங்கால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X