முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா| Mamata alleges Centre of discriminating against West Bengal | Dinamalar

முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (45)
Share
கோல்கட்டா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.மேற்கு வங்க முதல்வர், மம்தா பேசும் போது, 'கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என்
Mamata, Mamata Banerjee, Modi, PM modi, coronavirus, மோடி, மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பேசும் போது, 'கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என் மாநிலத்தில், மத்திய அதிகாரிகள் குழுவை அனுப்பி, பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என, சத்தம் போட்டு பேசினாராம். 'இது முதல்வர்கள் கூட்டமா அல்லது கோல்கட்டாவில் நடக்கும் அரசியல் கூட்டமா' என, பிரதமருடன் அமர்ந்திருந்த சில அமைச்சர்கள் ஆதங்கப்பட்டனர்.


latest tamil newsஆனால், பிரதமரோ, மம்தாவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். உடனே பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், 'ஒவ்வொரு முதல்வரும் நீண்ட நேரம் பேசினால், இந்த கூட்டம் முடிய, இரவு, 11:00 மணி ஆகிவிடும்; எனவே, யாரும் ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது' என, சொன்னாராம். மோடியும், 'இது சரியான யோசனை' என்றாராம். இதற்குப் பின்தான் பேச்சை முடித்திருக்கிறார், மம்தா.

தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடம், 'எதுக்கு அந்த அம்மா இப்படி கத்தறாங்க?' என கேட்டாராம். இந்தக் கூட்டத்தில், ஹிந்தி தெரிந்த சில அதிகாரிகள், முதல்வர் இ.பி.எஸ்.,சுடன் இருந்தனர். அவர்கள், மொழி பெயர்த்து, முதல்வருக்கு விளக்கினார்களாம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X