கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இருவரை வழியனுப்பிய அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இருவரை வழியனுப்பிய அதிகாரிகள்

Added : மே 18, 2020
Share

தர்மபுரி: கொரோனாவிலிருந்து மீண்ட இருவரை, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தென்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள், 25 மற்றும், 37 வயதுடைய ஆண்கள். இவர்கள், சென்னை கோயம்பேட்டிலுள்ள காய்கறி சந்தையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அவர்கள் கடந்த, 6ல் இரவு தென்கரைக்கோட்டைக்கு திரும்பினர். இதையறிந்த மாவட்ட நிர்வாகம், அவர்கள் இருவரையும், மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் அவர்கள், கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று மீண்டனர். இதையடுத்து, அவர்கள் இவரும், ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் மலர்விழி அவர்களுக்கு வாழ்த்துக்கூறி, கபசுர குடிநீர் மூலிகை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை வழங்கி வழியனுப்பி வைத்தார். அரூர் சப்- கலெக்டர் பிரதாப், டீன் பூவதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X