புதுடில்லி: இடது சாரி கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி. மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர். இந்த ஊரடங்கின் போது, மூன்று முறை காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துள்ளார் இவர். 'எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, மோடிக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் துவங்க வேண்டும்.
நாம் அமைதியாக இருந்தால், மோடிக்கு சாதகமாகிவிடும்' என, சோனியாவிடம் பேசியுள்ளாராம்.கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு செய்த தவறுகள், பிரதமர் புதிதாக அறிவித்துள்ள நிவாரண நிதியில் உள்ள ஓட்டைகள் என, பல விஷயங்களை சோனியாவிடம் விளக்கினாராம் யெச்சூரி. 'ஊரங்கால் எதிர்க்கட்சிகள் முடங்கிக் கிடக்கக் கூடாது; ஒன்று சேர வேண்டும்' என, சோனியாவிடம் வற்புறுத்தியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக அடிக்கடி ஏதாவது போரட்டம், எதிர்ப்பு என, டில்லியில் உள்ள இடது சாரி அலுவலகத்தின் முன் நடத்தி வருகிறார், யெச்சூரி. இப்போது, இவர் தான், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE