பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவக ஊழியர்கள் சம்பளம் உயர்த்த கோரிக்கை

Added : மே 18, 2020
Share
Advertisement

ஈரோடு: தினமும், 16 மணி நேரம் பணி செய்து பசி போக்கும் தங்களுக்கு, சம்பள உயர்வு வழங்க, அம்மா உணவக ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், 15 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. தற்போது ஊரடங்கு நிலவுவதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இவற்றில் சாப்பிட்டு பசி தீர்க்கின்றனர். இதனால் உணவாக ஊழியர்கள், விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அம்மா உணவகங்களில், 158 பேர், எட்டு ஆண்டாக பணியாற்றி வருகிறோம். தினக்கூலியாக, 250 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால், ஏப்.,1 முதல் காலை, 4:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை, 16 மணி நேரம் பணிபுரிகிறோம். எங்களுக்கு இதுவரை விடுமுறை கூட அளிக்கவில்லை. எட்டாண்டாக ஒரே சம்பளத்தில் தான் பணியாற்றுகிறோம். ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் எங்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X