பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்குக்கு பின் மண்டபத்துக்கு புக்கிங்; அட்வான்ஸை திருப்பித் தர வேண்டாம்

Added : மே 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட, திருமண மண்டப உரிமையாளர் சங்க, பொருளாளர் தர்மராஜ் கூறியதாவது: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மார்ச, 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பலர், மண்டபத்துக்கு செலுத்திய அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டனர். ஊடரங்கு அமலுக்கு முன்பே, அட்வான்ஸ் தொகை பெற்ற மண்டப உரிமையாளர்கள், அந்தந்த மாத கணக்கின்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி, உள்ளிட்ட வரி இனங்களை செலுத்தி விட்டனர். இந்நிலையில் முழு அட்வான்ஸ் தொகையை எப்படி திரும்ப தர முடியும். அது மட்டுமின்றி, அடுத்த ஆறு மாதத்துக்கு பிறகு நடக்கும் திருமணத்துக்கு, தாங்கள் தந்த அட்வான்ஸ் தொகையை சிலர் கேட்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த வாரம் மண்டப உரிமையாளர்களுடன், கலெக்டர் கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊரடங்கு காலத்தில் நின்ற திருமணத்துக்காக செலுத்தப்பட்ட அட்வான்ஸ் தொகையில், அரசுக்கு செலுத்திய வரியினங்களை கழித்துக்கொண்டு, மீதி தொகை கொடுத்தால் போதும் என்றார். இந்நிலையில், ஊரடங்குக்கு பிறகு வரும் திருமணங்களுக்கான தொகையை, பலர் திரும்ப கேட்டனர். இதுகுறித்து அவரிடம் விபரம் கேட்டபோது, திருப்பி தர வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். எனவே, ஊரடங்குக்கு பிறகு வரும் நிகழ்ச்சிகளுக்கு பெற்ற அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X