பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் சாக்கடை தூர்வாரும் பணி: மூடிய படிக்கட்டுகளால் தொழிலாளர்கள் சிரமம்

Added : மே 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டின் மையப்பகுதியான, மணிக்கூண்டு, ஆர்.கே.வி., ரோடு, கனிமார்க்கெட் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டை, தெப்பகுளம் வீதி சத்திரோடு உள்ளிட்ட பகுதியில், ஜவுளி கடைகள், லாரி ஆபீஸ், மஞ்சள் குடோன், மளிகை கடைகள், பாத்திர கடைகள், நகை கடைகள் என, 5,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதிகளில், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாக்கடைகளே உள்ளது. கொரோனா ஊரடங்கால் ஒரு மாதமாக, சாக்கடையை தூர்வாரும் பணியில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான கடைகளின் முன், சாக்கடை மீது சிலாப், படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. சிறிய கடைகளின் முன்பிருந்தவற்றை உடைத்து, தூர் வாரினர். ஆனால், பி.எஸ்.பார்க் மற்றும் ஆர்.கே.வி சாலையில், பல கடைகள், கட்டட அஸ்திவாரத்துடன் இணைத்து சாக்கடை மீது படிக்கட்டு அமைத்துள்ளன. இதனால் படிக்கட்டுகளை இடிக்க முடியாமல், சாக்கடைக்குள் இறங்கி, தூர்வாரும் பணியை செய்கின்றனர். குறுகலான சாக்கடையில் இறங்கும்போது, பலருக்கு கை மற்றும் கால்களில் காயம், சிராய்ப்பு சேற்றுப்புண் ஏற்படுகிறது. கடை உரிமையாளர்களே படிக்கட்டுகளை இடித்து அகற்றி கொடுத்தால், பொக்லின் இயந்திரம் மூலம், சாக்கடைகளில் விரைவாக தூர் எடுக்க முடியும். மாநகராட்சி நிர்வாகமும் இதில் கவனம் செலுத்த, தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X