சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனியன் நிறுவன தொழிலாளி பவானி ஆற்றில் மூழ்கி பலி

Added : மே 18, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: பவானி ஆற்றில் குளித்த பனியன் நிறுவன தொழிலாளி பலியானார். சத்தியமங்கலத்தை அடுத்த, புதுவடவள்ளி, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 21; பனியன் நிறுவன தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நண்பர் நவீன்குமாருடன், பவானிசாகரை அடுத்த, பழைய கொத்தமங்கலம் கிராமத்துக்கு நேற்று மதியம் வந்தார். இருவரும் பவானி ஆற்றில் குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்ற பெருமாள், நீரில் மூழ்கினார். நவீன்குமார் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் முயன்றும் முடியாத நிலையில், பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடினர். மாலை, 4:00 மணியளவில் பெருமாள் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X