சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை அபேஸ்: கில்லாடி ஆசாமிக்கு வலை

Added : மே 18, 2020
Share
Advertisement

அந்தியூர்: அந்தியூர், தனியார் மருத்துவமனையில், மூதாட்டியிடம் நகை பறித்த, கில்லாடி ஆசாமியால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோபி அருகே கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ஜீவானந்தம், 28; தனது தாயார் லட்சுமி, பாட்டி மாராயாள் ஆகியோருடன், அந்தியூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும், உறவினரை பார்க்க டூவீலரில் சென்றார். அந்தியூரில் டூவீலர் மீது குதிரை மோதியதில், காயமடைந்த மூவரும், அந்தியூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மூதாட்டி மாராயாளை எக்ஸ்ரே எடுக்க, ஊழியர்கள் நேற்று அழைத்து சென்றனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர், பாட்டியுடன் சென்றுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் கேட்டபோது, உறவினர் என்று கூறியுள்ளார். இந்நிலையில் எக்ஸ்ரே எடுத்து, மீண்டும் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடையாளம் தெரியாத ஆசாமி, மூதாட்டி அணிந்திருந்த நான்கு பவுன் நகை, பணப்பையை வைத்திருக்க கூடாது எனக்கூறி வாங்கிச் சென்றுள்ளார். அறைக்கு திரும்பிய மூதாட்டியிடம், உறவினர்கள் கேட்ட போதுதான், மர்ம ஆசாமி பறித்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, அந்தியூர் போலீசார், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து, தில்லாலங்கடி ஆசாமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X