பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண பொருள் வழங்கல்; அ.ம.மு.க.,வினர் மீது வழக்கு

Added : மே 18, 2020
Share
Advertisement

இடைப்பாடி: சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கியதாக, அ.ம.மு.க.,வினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இடைப்பாடியில், அ.ம.மு.க., சார்பில், ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலர் சேகர் தலைமை வகித்தார். அதில், சேலம் மேற்கு மாவட்ட செயலர் மாதேஸ்வரன், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். ஆனால், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், கூட்டம் சேர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், இடைப்பாடி போலீசார், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்துவதாக கூறி, நிவாரண பொருட்கள் வழங்குவதை நிறுத்தினர். அத்துடன், சேகர், மாதேஸ்வரன் உள்ளிட்ட அ.ம.மு.க.,வினர் மீது வழக்குப்பதிந்தனர். மேலும், அ.ம.மு.க.,வினர் நிவாரண பொருட்களை வைத்திருந்த இடம், நகராட்சியின் வணிக கடை என்பதால், அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். அதற்கு முன், அங்கிருந்த அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை, நகராட்சி குப்பை அள்ளும் வாகனம் மூலம், அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். பின், அப்பொருட்களை, தூய்மை பணியாளருக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X