பொது செய்தி

தமிழ்நாடு

முதியவருக்கு தொற்றால் டிரைவரும் தனிமை

Added : மே 18, 2020
Share
Advertisement

மேட்டூர்: காரில் வந்த முதியவருக்கு தொற்று உறுதியானதால், அவரை அழைத்து வந்த டிரைவரும் தனிமைப்படுத்தப்பட்டார். மேட்டூர், கருமலைக்கூடல், நேரு நகரைச் சேர்ந்தவர், 68 வயது முதியவர். சென்னையில், இரு மாதமாக, மகனுடன் வசித்த அவர், மனைவியுடன், கடந்த, 15 இரவு, மேட்டூருக்கு திரும்பினார். தொப்பூர் சோதனைச்சாவடி அருகே, சுகாதார துறையினர் நிறுத்தி, சளி மாதிரி சேகரித்த பின், அவர்களை மேட்டூர் அனுப்பினர். பரிசோதனை முடிவில், முதியவருக்கு தொற்று இருப்பது உறுதியானதால், நேற்று முன்தினம், அவர், அவரது மனைவியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தனிமைபடுத்தினர். அதேபோல், தம்பதியை, சென்னையிலிருந்து காரில் அழைத்து வந்த, மேட்டூர், ராமன் நகரை சேர்ந்த டிரைவரையும், சுகாதாரத்துறையினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X