பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் விற்பனையாளர், எடையாளர் வரும் 31 வரை பயணப்படி பெறலாம்

Added : மே 18, 2020
Share
Advertisement

சேலம்: வரும், 31 வரை, ரேஷன் விற்பனையாளர், எடையாளர், தினமும் பயணப்படி பெறலாம் என, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில், ரேஷன் விற்பனையாளர்கள், அரசு அறிவித்த திட்டத்தை செயல்படுத்தி, ரேஷன் அட்டைக்கு, 'கொரோனா' நிவாரணமாக, தலா, 1,000 ரூபாய், விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வினியோகித்தனர். தொடர்ந்து, ஜூன் வரை, விலையில்லா பொருட்கள் வினியோகம் தொடர்கிறது. சிறப்பாக பணிபுரிந்த அவர்களுக்கு, ஒருமுறை சிறப்பு ஊக்கத்தொகை, விற்பனையாளருக்கு, தலா, 2,500 ரூபாய், எடையாளருக்கு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டன. அதன்படி, 21 ஆயிரத்து, 517 விற்பனையாளர், 3,777 எடையாளர், சிறப்பு ஊக்கத்தொகை பெற்றனர். இதுதவிர, அவர்கள், ஊரடங்கு காலத்தில், பணிக்கு வரும் சிரமத்தை தவிர்க்க, விற்பனையாளர், எடையாளருக்கு, ஏப்ரலில், தினசரி பயணப்படி, தலா, 200 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. தற்போது, ஊரடங்கு மே, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை, அவர்களுக்கு அறிவித்தப்படி, பயணப்படி, தொடர்ந்து வழங்கப்படும் என, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X