பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்.,ல் வடமாநில பெண் ரகளை; மயக்க ஊசி போட்ட மருத்துவ குழு

Added : மே 18, 2020
Share
Advertisement

சேலம்: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில பெண், ரகளையில் ஈடுபட்டதால், அவருக்கு, மயக்க ஊசி போட்டு, மருத்துவ குழுவினர், கட்டுப்படுத்தினர்.
கோல்கட்டாவைச் சேர்ந்த, சஞ்சய்குமார் பானர்ஜி மகள் இஷிகா பானர்ஜி, 33; பெங்களூருவில் தங்கி, தனியார் கல்லூரியில், பேஷன் டெக்னாலஜி, முதலாமாண்டு படிக்கிறார். அவருக்கு, மனநிலை பாதிப்பு அதிகமாகி, கடந்த, 14 இரவு, விடுதியை விட்டு வெளியேறியவர், சென்னை வரை செல்ல, 'லிப்ட்' கேட்டு, லாரியில், சேலம் நோக்கி வந்துள்ளார். அப்போது, லாரி டிரைவர், ஓமலூர், ரோஜா நகரைச் சேர்ந்த செந்தில், 34, தன் தாயை பார்த்துவிட்டு செல்லலாம் எனக்கூறி, அப்பெண்ணை, வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அதைப்பார்த்த, அக்கம்பக்கத்தினர், 'கொரோனா' பாதித்த பெண் என சந்தேகித்து, ஓமலூர் போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர். போலீசார், லாரியுடன், அப்பெண்ணை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பின், மீண்டும் அழைக்கும்போது, ஆஜராவதாக எழுதி பெற்றுக்கொண்டு, டிரைவரை கண்டித்து அனுப்பினர். பின், அப்பெண்ணை, சேலம், அரசு மருத்துவமனையில், கடந்த, 16 இரவு அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை, 11:40 மணிக்கு, அவர், கழிப்பறை சுத்தமாக இல்லை, தண்ணீர் வசதியில்லை எனக்கூறி, ரகளையில் ஈடுபட்டு, டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் தடுத்தும், அப்பெண் கட்டுப்படவில்லை. அங்குள்ள ஜன்னல் மீது அமர்ந்து கூச்சலிட்டார். பேரிடர் மீட்பு குழுவினர், அப்பெண்ணை பத்திரமாக மீட்டு, கை, கால்களை கட்டிப்போட்டனர். பின், மயக்க ஊசி போட்டதும், சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் கூறுகையில், ''கோல்கட்டாவிலுள்ள பெண்ணின் பெற்றோருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேலம் புறப்பட்டு விட்டனர். நாளை(இன்று) சேலம் வந்து, மகளை, அழைத்துச்செல்வதாக உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X