பொது செய்தி

தமிழ்நாடு

குப்பனூர் சோதனைச்சாவடி இடமாற்றம்: டி.ஐ.ஜி., ஆய்வு

Added : மே 18, 2020
Share
Advertisement

சங்ககிரி: குப்பனூர் சோதனைச்சாவடி, சின்னாக்கவுண்டனூர் பைபாஸூக்கு இடமாற்றப்பட்டதால், டி.ஜ.ஜி., ஆய்வு செய்தார். சங்ககிரியில், குப்பனூர் பைபாஸ், சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட், பால்மடை ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, வி.ஏ.ஓ., சுகாதாரத்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர், சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குப்பனூர் பைபாஸ் சோதனைச்சாவடியில், போதிய இடவசதி இல்லாததோடு, சில வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்கின்றனர். இதனால், அங்கு செயல்பட்ட சோதனைச்சாவடியை, சின்னாக்கவுண்டனூர் பைபாஸூக்கு, நேற்று இடமாற்றம் செய்தனர். இதனால், அந்த சோதனைச்சாவடியை, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து, கலெக்டரிடம் பேசி, அதிக ஒளி தரக்கூடிய மின் விளக்கு, தரமான முறையில் '?ஷட்' அமைக்க ஏற்பாடு செய்யுமாறு, போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து நபர்களிடம், 'இ - பாஸ்' கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லாதவர்களை, தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அவருடன், ஏ.டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சங்ககிரி டி.எஸ்.பி., தங்கவேல் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X