பொது செய்தி

தமிழ்நாடு

செப்டம்பர் வரை லாரிக்கு சாலை வரி ரத்து: உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

Added : மே 18, 2020
Share
Advertisement

மேட்டூர்: செப்டம்பர் வரை, லாரிகளுக்கு சாலைவரியை ரத்து செய்ய, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாசலம், தமிழக அரசுக்கு அனுப்பிய மனு: தமிழக அரசு, லாரி, சரக்கு வாகனங்களுக்கு, ஏப்ரலுக்கு முன்னதாக செலுத்த வேண்டிய காலாண்டு சாலை வரியை, ஜூனுக்குள் செலுத்த அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால், பெரும்பாலான லாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரிகளுக்கு, சாலைவரியை உரிமையாளர்கள் எங்கிருந்து செலுத்துவர். அதனால், செப்டம்பர் வரை, லாரிகளுக்கு சாலைவரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X