சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணியை கட்டிப்போட்டு நகை பறிக்க முயற்சி: மக்கள் சுற்றிவளைத்து நன்கு கவனிப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

சேலம்: கர்ப்பிணியை கட்டிப்போட்டு நகை பறிக்க முயன்றவரை, மக்கள் சுற்றிவளைத்து பிடித்து, நன்கு கவனித்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த, குமரேசன் மகன் சுரேஷ், 37. இவருக்கு, சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி, சுண்ணாம்புக்கார தெருவிலுள்ள பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதனால், சில ஆண்டுக்கு முன் சேலம் வந்துவிட்டார். வீடுகளில் சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம், காலை, 11:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனின் வீட்டின் மேல் மாடிக்கு சென்றார். அங்கு, கிருபாகரனின் மகளான, கர்ப்பிணி யமுனா, 27, மட்டும் இருந்தார். அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு, கத்திமுனையில் பணம், நகை கேட்டுள்ளார். அவர், தன்னிடமிருந்த நகை, பணத்தை கொடுத்த நிலையில், அதை பெற்றுக்கொண்டு இறங்கியபோது, யமுனாவின் தாய் பார்த்து கூச்சலிட்டார். இதனால், அப்பகுதி மக்கள் திரண்டு, சுரே?ஷ சுற்றிவளைத்து பிடித்து, நன்கு கவனித்தனர். நகை, பணத்தை மீட்டுக்கொண்டு, அவரை கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மக்கள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், இதுபோன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X