வேகத்தடையால் இரு பிரிவினர் மோதல்: 4 பேருக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேகத்தடையால் இரு பிரிவினர் மோதல்: 4 பேருக்கு காப்பு

Added : மே 18, 2020
Share

ஓமலூர்: வேகத்தடை தொடர்பாக, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில், நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
காடையாம்பட்டி, வேப்பிலை ஊராட்சி, தாட்ராவூருலிருந்து, மாங்கானிகாடு செல்லும் வழியில், ஒரு பிரிவைச் சேர்ந்த, 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், நேற்று முன்தினம், வேகத்தடை அமைக்கப்பட்டது. இதை கடந்து, மாங்கானிகாடு பகுதியில், மற்றொரு பிரிவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், தாட்ராவூர் காலனியைச் சேர்ந்த சூர்யா, 25, யாரை கேட்டு வேகத்தடை அமைக்கப்பட்டது எனக்கூறி, அவற்றை இடித்து தள்ளினார். இதுகுறித்து, மாங்கானிகாடு செல்லும் வழியிலுள்ள சதீஷ், 30, ரவி, 30, அவர்களது குடும்பத்தினர் நான்கு பேர் கேட்டுள்ளனர். அதற்கு சூர்யா, அவர்களை தாக்கிவிட்டு, தாட்ராவூர், பொம்மியம்பட்டி காலனியிலுள்ள சிலரை அழைத்து வந்து மீண்டும் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக, மணி, 25, அரவிந்த், 20, அருள்மணி, 20, புகழரசன், 28, ஆகியோரை, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X