பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளில் முடிகிறது கோவில்களில் முடியாதா?

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement
coronavirus lockdown, lockdown, covid 19, temple,  மதுக்கடை, கோவில், சமூக இடைவெளி, ஆன்மிகவாதி, பக்தர்கள்

'சமூக இடைவெளியை, மது வாங்குவோரே பின் பற்றும் போது, பக்தர்களாலும் முடியும். எனவே, கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, அரசுக்கு ஆன்மிகவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும், கோவில்களில் நடக்க இருந்த விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பெரும் வருத்தமடைந்தனர்.அவர்களுக்கு ஆறுதலாக, முக்கிய கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மட்டும், 'ஆன்-லைன்' வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

தற்போது, ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.சமீபத்தில், 'குடி'மகன்கள் வசதிக்காக, 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டு, தினமும் 500 பேருக்கு, சமூக இடைவெளியுடன், மது பானங்கள் விற்பனை செய்ய, அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில், கோவில்களிலும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


latest tamil newsஇது குறித்து, ஆன்மிகவாதிகள் தரப்பில் கூறியதாவது:'குடி'மகன்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை, பக்தர்கள் விஷயத்திலும், அரசு காட்ட வேண்டும். 'டாஸ்மாக்' போலவே, கோவில்களிலும் காணிக்கை, நன்கொடை வாயிலாக, வருமானம் வருகிறது என்பதை, மறந்து விடக் கூடாது.டாஸ்மாக்கில்டோக்கன் முறையில், மது பானங்கள் வழங்குவது போல, கோவில்களிலும், டோக்கன் முறையில், தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் .'குடி'மகன்களே சமூக இடைவெளியை கடைபிடிக்கும்போது, பக்தர்கள் கடைபிடிக்க மாட்டார்களா! எனவே, கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
18-மே-202020:18:08 IST Report Abuse
S. Narayanan மதுவுக்கு அடிமையாகி கடவுளை மறந்தவன் மீண்டும் எழ மாட்டான்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-மே-202019:10:32 IST Report Abuse
elakkumanan என் டாஸ்மாக் மாநிலமே...................சரக்கு தயாரிக்கும் கொம்பேனிக்கும் சரக்கு விற்கும் கம்பனிக்கும் அடிமையான ரேசன்கடை ஓசி காசு வாழ் என் டாஸ்மாக் மாநிலமே............டாஸ்மாக் கடையும் கோவிலும் ஒண்ணா? என்ன ஒரு குசும்பான கேள்வி.......என் இனத்தின் ரோஷத்தை, கோவத்தை தூண்டாதீர்........ப்ளீஸ்........ரோசம் வந்தால், இன்னும் ரெண்டு குவாட்டர் சேர்த்து வாங்கி குடிச்சு கொலை வெறியாகிடுவான் என் இனம்.....சரக்கு விக்காம, குடிக்காம, தயாரிக்காம, எப்புடி பொருளதாரத்தை வளர்ப்பது.......தெரியாமத்தான் கேக்குறேன்.............நீங்க ஓசியா கொடுத்த காசை, உங்களுக்கே திருப்பி கொடுத்து, சரக்கு வாங்கி, பொருளாதாரத்தை வளர்த்து அதேசமயம், நன்றி கடனையும் அடைக்கும் என் இனத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் கட்டுரையாளரை கண்டிக்கிறேன்................
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
18-மே-202019:03:37 IST Report Abuse
krish உள்ளூர் பக்தர்களை, அடையாளம் கண்டு, கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும். வெளியூர் பக்தர்களை, குறிப்பாக, யாத்திரை பேருந்துகளில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களை, ஊரடங்குக்கு பின் பயணம் செய்ய வலியுறுத்தவேண்டும். அந்தந்த ஊர்வாசிகள், அவரவர் பக்கத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்ய அரசு கோயில்களை திறந்து, பக்தர்கள் வழிபாடு முறையை, சீராக, தொற்று பரவா வகையில், செயல்படுத்துதல் அவசியம். இறைவனை தரிசிக்க, பக்தர்கள் ஏங்கும் இச்சமயத்தில் அரசு கருணை பூண்டு ஆவண செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X