குப்பை கிடங்காக மாறும் மேட்டூர் அணை; தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

மேட்டூர்: கரையோர கிராம குப்பையை, வறண்ட நீர்பரப்பு பகுதியில் கொட்டுவதால் மேட்டூர் அணை குப்பை கிடங்காக மாறுவதோடு, தீப்பற்றி எரிவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
மேட்டூர் அணை மொத்த நீர்பரப்பு பகுதி, 152 சதுர கி.மீ., மொத்த நீர்மட்டம், 120 அடி. அணை கரையில் சேலம், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டங்கள் உள்ளன. அணை நிரம்பினால், 152 சதுர கி.மீ., பரப்பளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். நீர்மட்டம் குறையும்போது, தண்ணீர் தேங்கியிருந்த நிலப்பரப்புகள், படிப்படியாக வறண்டு விடும். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம், 100.02 அடியாக உள்ளது. இதனால், அணையில் நீர் தேங்கியிருந்த, 60 சதுர கி.மீ., பரப்பளவு வறண்டுவிட்டன. சமீபகாலமாக அணையின் வறண்ட நிலப்பரப்பு பகுதியை இரு மாவட்டங்களிலும், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் குப்பை கிடங்காக மாற்றி வருகின்றனர். அணை கரையோர கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பையை, டிராக்டர், லாரியில் ஏற்றி, அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் ஆங்காங்கே கொட்டுகின்றனர். அதை, சுற்றுப்பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தினர், மக்கள் கொட்டுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக குப்பையை கொட்டினால் பிரச்னை ஏற்படும் என்பதால், தேங்கும் குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர். பொதுப்பணித்துறை நிர்வாகம், அணை கரையோர பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X