பொது செய்தி

தமிழ்நாடு

காப்புக்காட்டிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்

Added : மே 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கடும் கோடை வெப்பம் வாட்டி வருவதால், பர்கூர் சரக காப்புக்காட்டிலுள்ள தொட்டிகளில், வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.கிருஷ்ணகிரி வனச்சரகம், பர்கூர் காப்புக்காடு, 1,555 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், மயில், முயல், கீரி, காடை, கவுதாரி, காட்டுக்கோழி மற்றும் பாம்புகள் உள்ளன. தற்போது, மழையின்றி கடும் வெப்பம் வாட்டி வருவதால், காடுகளில்

கிருஷ்ணகிரி: கடும் கோடை வெப்பம் வாட்டி வருவதால், பர்கூர் சரக காப்புக்காட்டிலுள்ள தொட்டிகளில், வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி வனச்சரகம், பர்கூர் காப்புக்காடு, 1,555 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், மயில், முயல், கீரி, காடை, கவுதாரி, காட்டுக்கோழி மற்றும் பாம்புகள் உள்ளன. தற்போது, மழையின்றி கடும் வெப்பம் வாட்டி வருவதால், காடுகளில் தண்ணீரின்றி குட்டைகள் வறண்டுள்ளன. இதனால், வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியே வருவதை தடுக்க, பர்கூர் சரகத்துக்கு உட்பட்ட காடுகளில் உள்ள தொட்டிகளில், வனத்துறையினர் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். பர்கூர் வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில், பர்கூர் வனவர் ஹேமலதா மற்றும் வனக்காப்பாளர்கள், பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி காப்புக்காடு அக்னிமாரியம்மன் கோவில் கால் பாதை சரகத்திலுள்ள மான் தொட்டியிலும், பாறையில் இயற்கையாக அமைந்துள்ள பள்ளத்திலும், டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பினர். இதேபோல், 1,232 ஹெக்டேரில் அமைந்துள்ள, பர்கூர் நந்திபண்டா காப்புக்காட்டில், ஒப்பதவாடி கூட்ரோடு அருகில் உள்ள தடுப்பணையில் மழைநீர் தேங்கியுள்ளதையும், வனத்துறையினர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X