6 கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

6 கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனை

Added : மே 18, 2020
Share

கிருஷ்ணகிரி: ஆறு கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
பெரிய வெங்காயத்தின் விலை தங்கம் போல் தினமும், மாறிக் கொண்டே உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், வெங்காயத்தை வாங்குவோர் குறைந்ததால், பல இடங்களில் வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டது. தற்போது, கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சிறிய வாகனம் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு அதிகளவில் வெங்காயம் வந்துள்ளதால், விலை குறைந்துள்ளது. இதனால், தற்போது வண்டிகளின் மூலம், ஆறு கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் ஒரு கிலோ, 16 ரூபாய்க்கு கிடைப்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்குகின்றனர். கடைகளில், ஒரு கிலோ வெங்காயம், 20 ரூபாய்க்கு விற்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X