பொது செய்தி

தமிழ்நாடு

காற்றுடன் கனமழையில் சாய்ந்த மின் கம்பங்கள்

Added : மே 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காற்றுடன் பெய்த மழையால், கிருஷ்ணகிரியின் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில், கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரி நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், கே.தியேட்டர் சாலை, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.ஐ.சி., அலுவலகம்

கிருஷ்ணகிரி: காற்றுடன் பெய்த மழையால், கிருஷ்ணகிரியின் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில், கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரி நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், கே.தியேட்டர் சாலை, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் என, நகரில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதில், மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததில், மின்கம்பிகள் அறுந்ததால், நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றால் பல இடங்களில் பேனர்கள் சாலையில் விழுந்தன. சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டிகள் சாலைக்கு வந்தன. மாலை, 6:00 மணிக்கு மழை விட்டதும், மின்வாரிய ஊழியர்கள் மீட்பு பணிகளை துவங்கினர். கம்பிகள் அறுந்து விழுந்த இடங்களில், இரவு, 9:00 மணி வரை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கம்பங்கள் விழுந்த பகுதிகளில் இன்று காலையில் புதிய கம்பங்கள் அமைத்து, மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின்தடையால், நேற்று கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் மின்சாரமின்றி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இதேபோல் ஊத்தங்கரை, சூளகிரி, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X