பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Added : மே 18, 2020
Share
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. அங்குள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும், சென்னையில் பணியாற்றி வரும், தொட்டேப்பள்ளியை சேர்ந்த வெங்கட்ராஜ், 40, என்பவருக்கும், திருமணம் ஏற்பாடுகள் நடப்பதாக, சென்னை, ஏ.டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் உஷார் படுத்தப்பட்டு, மாரண்டப்பள்ளி வி.ஏ.ஓ., திம்மராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். சிறுமியின் பெற்றோர், மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவில்லை என, அதிகாரிகளிடம் கூறினர். ஆனால், சென்னைக்கு கடத்திச்சென்று, சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறி, ஓசூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பான தகவலின்படி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலக அதிகாரிகள், சிறுமியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X