குண்டாஸில் 3 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குண்டாஸில் 3 பேர் கைது

Added : மே 18, 2020
Share

வேலூர்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் அஜித், 21; கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில், ஆற்காடு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., மயில் வாகனன் பரிந்துரைத்தார். கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவையடுத்து, அவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் சுபாஷ், 23; வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார், 24; ரவுடி ஜானியின் கூட்டாளிகளான இவர்களை ஆள் கடத்தல், வழிப்பறி வழக்குகளில், காட்பாடி போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தலா, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பிரவேஷ்குமார் பரிந்துரைத்தார். கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவையடுத்து, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X