பொது செய்தி

தமிழ்நாடு

ஜவ்வாதுமலைக்கு மேலும் 300 தொழிலாளர் வருகை

Added : மே 18, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: கர்நாடகாவில் தோட்ட தொழிலாளர்களாக பணிபுரிந்த, ஜவ்வாதுமலை தொழிலாளர்கள், 300 பேர் நேற்று ஊர் திரும்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள, 272 கிராமங்களில், 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள், கர்நாடகா மற்றும் கேரளாவில் தேயிலை தோட்டத்திலும், மூங்கில் வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஊரடங்கால் வேலையிழந்து தவித்தனர். இவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப, மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி கர்நாடகாவில் தவிக்கும் தொழிலாளர்களை, அம்மாநில பஸ்கள் மூலம், ஜவ்வாதுமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஏற்கனவே வந்த, 1,000க்கும் மேற்பட்டோர், ஜவ்வாதுமலை வனத்துறை பள்ளிகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, 300 பேர் வந்தனர். ஜவ்வாதுமலையில் தனிமைப்படுத்த இடம் இல்லாததால், ஆரணி அடுத்த தச்சூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X