பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் தகவல்

Added : மே 18, 2020
Share
Advertisement

கோபி: ''தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபியில் நேற்று கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே வேங்கம்மையார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், ஆதரவற்ற, 110 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மளிகை பொருட்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தொற்று உள்ள பகுதிகளில், அரசுப்பள்ளி இருந்தால், அங்கும் பத்தாம் வகுப்பு தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேர்வர்கள் தேர்வறைக்கு மட்டுமே சென்று, வீடு திரும்புவர். தேர்வர்கள் எந்த அச்சமுமின்றி வந்து செல்ல, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலம் சென்றுள்ள தேர்வர்கள், தேர்வெழுத வசதியாக, இ-பாஸ் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தேர்வருடன், அவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் என ஒருவருக்கு அனுமதி பாஸ் வழங்கப்படும். தேர்வெழுத தயாராக உள்ள தேர்வர்கள், தற்போது எங்குள்ளனர் என்ற விபரத்தை, பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது. விபரங்கள் கிடைத்ததும், முதல்வருடன் பேசி, தெளிவான விபரம் நாளை (இன்று) அறிவிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சூழ்நிலை காரணமாக, தேர்வில் கலந்து கொள்ள முடியாத தேர்வர்களுக்கு, மறு தேர்வு நடத்துவது குறித்து, தேவையிருப்பின் அரசு பரிசீலனை செய்யும். மலைப்பகுதியில் வசிக்கும் தேர்வர்களுக்கு, கல்வி சேனல் மூலம் பொதுத்தேர்வு குறித்த அட்டவணை அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X