பொது செய்தி

தமிழ்நாடு

எப்.சி.ஐ., மூலம் பிற மாநிலத்தவருக்கு அரிசி வழங்கல்

Added : மே 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், எப்.சி.ஐ., மூலம், பிற மாநிலத்தவருக்கு அரிசி வழங்கும் பணி துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவருக்கு, அரிசி வழங்க, இந்திய உணவு கழகத்துக்கு (எப்.சி.ஐ.,) மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம், ஈரோடு, மூலப்பாளையத்தில் உள்ள, இந்திய உணவு கழகத்தில் இருந்து, அரிசி மூட்டைகள், லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கு, அனுப்பி வைக்கப்பட்டது. மே மாதம், 2,000 டன் அரிசி, ஜூன், 15க்குள், 2,000 டன் அரிசியும் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவருக்கு வழங்கப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அலுவலர்கள் மூலம், பிற மாநிலத்தவர் வசிக்கும் இடங்கள். நிறுவனங்கள், பிற மாநிலத்தவர் எண்ணிக்கையை ஏற்கனவே கணக்கெடுத்து வைத்துள்ளது. அப்பகுதியில் உள்ளவர்களுக்கு, மொத்தமாக கணக்கிட்டு அரிசி வழங்கப்படுகிறது என்று, வருவாய் துறையினர் தெரிவித்தனர். இந்திய உணவு கழகம் மூலம், அரிசி வழங்கப்படுவதை, மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், டுவிட் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X