பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி இல்லை

Added : மே 18, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை, அம்மா உணவகத்தில் சமூக இடைவெளியின்றி மக்கள் உணவு சாப்பிடுகின்றனர். குளித்தலையில் செயல்படும் அம்மா உணவகத்தில், கடந்த மாதம், 23ல் இருந்து மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், அரசு நிகழ்ச்சிக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்து, உணவு சாப்பிட்டனர். இந்நிலையில், நேற்று காலை மற்றும் மதியம் சாப்பாட்டிற்காக வந்த பொது மக்கள், சமூக இடைவெளி பின்பற்றாமல் வரிசையில் நின்றனர். சாப்பிட வரும் பொது மக்கள், சமூக இடைவெளி பின்பற்றவும், அதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X