பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண தொகை பெற மனு அளிக்கலாம்

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 14 ஆயிரத்து, 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா, 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத, முடிதிருத்தும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் மனு அளிக்க வேண்டும். நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், வி.ஏ.ஓ., ஆகியோரிடம் மனு சமர்ப்பிக்க வேண்டும். மனுக்களின் மீது உரிய ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான நபர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X