பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் திரும்பிய 16 பேருக்கு 'கொரோனா'

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, கரூர் திரும்பிய, 16 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, 42 பேர் குணமடைந்ததால், சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு, கரூர் மாறியது. கடந்த, 10 நாட்களாக சென்னை மற்றும் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து திரும்பிய, 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவிலிருந்து, கரூர் பள்ளப்பட்டி திரும்பிய, ஒரு பெண் உள்ளிட்ட, 16 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இவர்கள், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை, 27 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X