தமிழ்நாடு

அரசு கல்லூரிகளில் 'ஷிப்ட்' முறை ரத்து?

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: அரசு கலை கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு முதல், 'ஷிப்ட்' முறை ரத்தாகலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள, 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 'ஷிப்ட்' முறை உள்ளது. இதன்படி காலை, 7:00-1:30 மணி; மதியம், 1:30-6:30 மணி வரை வகுப்பு நடக்கிறது. உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, உபகரணங்கள் வாங்க, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த 'ஷிப்ட்' முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, பழைய முறையில் ஒரே 'ஷிப்ட்'டாக வரும், கல்வியாண்டு முதல் வகுப்புகள் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: காலையில், 7:00 மணிக்கு கல்லூரி வர வேண்டிய நிலையில், மாணவ, மாணவியர் காலை உணவை சாப்பிடாமல் வருகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதேபோல், மதியம் வருபவர்கள், 6:30 மணிக்கு மேல் வீடு திரும்புவதில் சிரமம் உள்ளது. இதனால் காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை ஒரே 'ஷிப்ட்'டாக பழைய முறையில் நடத்த, கல்வி இயக்குனரகம், உயர் கல்வி துறைக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், இதற்காக தேவைப்படும் அரசால் அறிவிக்கப்பட்ட, 150 கோடி ரூபாயை, 715 புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், மாணவ, மாணவியருக்கு தேவைப்படும், 10 ஆயிரம் இருக்கைகள், பேராசிரியர்களுக்கு பயன்படும், 600 மேஜைகள் வாங்கவும் பயன்படுத்தி கொள்ள நிர்வாக அனுமதி வழங்கும் படியும், கல்லூரி இயக்குனரகம் உயர்க்கல்வி துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X