பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எப்படி? வேளாண் பல்கலை ஆய்வு மையம் அறிக்கை

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று, கோவை வேளாண்மை பல்கலை கழகம், அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை, துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில் கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், வழக்கத்தை விட குறைவாக பெய்யும் என, கோவை வேளாண்மை பல்கலை கழக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்க மான மழை பெய்யும். கடந்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில் சிறிது மழை குறைந்தாலும், சராசரி அளவையொட்டி மழை இருக்கும். திருச்சி மாவட்டத்தில், 274 மி.மீ., வேலூரில், 473, திருவாரூரில், 275, தஞ்சாவூர், 292, நாகப்பட்டினம், 266, புதுக்கோட்டையில், 329 மி.மீ.,க்களில் மழையை எதிர்பார்க்கலாம். மதுரை, விருதுநகர், கரூர், சேலம், பெரம்பலூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்கத்தை விட, குறைவாகவே பெய்யும். கரூரில் வழக்கமாக, 213 மி.மீ., பெய்யும். ஆனால் நடப்பாண்டு, 189 மி.மீ., மழை பெய்யும். இதேபோல், திருவண்ணாமலையில், 468 மி.மீ.,க்கு பதிலாக, 416 மி.மீ.,; சென்னையில், 439 மி.மீ.,க்கு பதிலாக, 378 மி.மீ., மழை பெய்யும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 110 சதவீதம்: கடந்த, 2019ல் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே, 18ல் பெய்ய துவங்கியது. மேலும், 96 சதவீதம் பெய்யும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஆனால், 110 சதவீதம் பெய்தது. நடப்பாண்டும் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை, அந்தமான் நிகோபார் தீவில் நேற்று துவங்கியுள்ளது. ஜூன், 5ல் கேரளா கடற்கரை பகுதிகளில், மழை பொழிவு இருக்கும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X